Highlights
General
Title |
Chellammal செல்லம்மாள் |
Author |
|
Language |
Tamil |
Edition |
|
Pages |
Publication
Published By |
Kalachuvadu Pathippagam |
₹162
செல்லம்மாளின் வாழ்க்கைக் குறிப்புகள் ஒரு பெண்ணின் குடும்பம் குறித்த தொடர்ந்த மனத்தாங்கலின் ஆவணம் மட்டுமல்லாமல் சிறு பெண்களாகவும் மனைவிகளாகவும் விதவைகளாகவுமுள்ள பெண்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள், அவமதிப்புகள், பேசமுடியாமல் ஊமையாக்கப்படும் அவலங்கள் இவற்றின் ஒலியில்லாக் கூக்குரலாகவும் இருக்கின்றன. குடும்ப அமைப்பின் சிக்கலான உறவுகள், உரையாடல்கள், உணவு படைத்தல், அவநம்பிக்கைகள், அவதூறுகள் இவற்றுடன் வரும் அழகு, அன்பு, பாசம், கனிவு, காதல் இவற்றை நேரடியாக மட்டுமில்லாமல் தன்மறிவாகவும் கூறும் இக்குறிப்புகள் சாதாரணக் குடும்ப அரசியலில் சிக்குண்ட பெண் எழுதும் மனக்குறைகள் அல்லது புலம்பல்கள் என்ற தளத்திலிருந்து இந்தப் பிரதியை வெகுவாக உயர்த்துகிறது. பிரதியின் ஆழத்தையும் அதைப் பகிர்ந்துகொள்ள நினைக்கும் விழைவையும் அதில் தொக்கி நிற்கும் புரிதலுக்கான இறைஞ்சலையும் நம்மால் உணரமுடிகிறது.
Reviews
There are no reviews yet.