இணையேற்பில் ஏன் இசைக்குழுக்கள் மனிதன் பிறப்பில் இருந்து இயற்கையோடு கலக்கும்வரை இசையின் பங்கு இல்லாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. மழலை பருவத்தில் உறங்க வைக்கும் தாலாட்டு முதல், வளரும் பருவ நிலையில் நம்மை உற்சாகப் படுத்த கொடுக்கும் கர ஒலியோடு தொடர்ந்து, நம் வெற்றிகளை, நம் அடுத்தகட்ட நகர்வை கொண்டாடும் கொண்டாட்ட இசையுடன் பயணித்து நம் கடைசி நிலையான இயற்கையோடு கலந்த பின் அறிவிக்கும் அறிவிப்பு இசையில் முடிவுறுகிறது, இப்படி நம் வாழ்க்கை பயணத்தில் இசை இல்லாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை.
இணையேற்பு என்பது நம் வாழ்வின் அடுத்த கட்ட நகர்வு, இதைக் கொண்டாட்டமாக வரவேற்க கொண்டாட்ட இசையும், இன்று முதல் என் இணையர் இவர் என்று இந்த உலகிற்கு[ உற்றார், உறவினர் & நண்பர் ] அறிவிக்கும் அறிவிப்பில் இசையும் பங்களிக்கிறது. இணையேற்பு நாளை சிறிப்பிக்கும் பங்கு இசைக்கும் உண்டு.
நம்மை சிறப்பு செய்து மகிழ்விக்கும், இசையை வளர்ப்பதும், இசைக் கலைஞர்களை வளர்ப்பதுமே நம் சிறப்பாகும். மண்னிசைக் கலையை வளர்ப்போம் மண்ணிசைக் கலைஞர்களை வளர வைப்போம்