Highlights
General
Title |
Cheranmaadevi சேரன்மாதேவி |
Author |
|
Language |
Tamil |
Edition |
|
Pages |
Publication
Published By |
Kalachuvadu Pathippagam |
₹338
சாப்பாட்டில் சகல வகுப்புகளையும் சேர்ந்த பிராமணர் ஒரு பக்கமாகவும் சகல வகுப்புகளையும் சேர்ந்த பிராமணரல்லாதவர் ஒரு பக்கமுமாகவே இருந்து சாப்பிடவேண்டும். குருகுலத்தில் இவ்வித்தியாசம் கூடாது என்று நான் சொன்னேன். ஆனால் இந்த வேற்றுமையை ஒழிக்க முடியாதென்று (வ.வே.சு.) ஐயர் கூறினார். இதைக் கேட்டதும் நானும் ஸ்ரீமான் ஈ.வி. ராமசாமி நாயக்கர் போன்ற பிராமணரல்லாதாரும் திடுக்கிட்டுப் போனோம். டாக்டர் வரதராஜுலு நாயுடு (1924) வைக்கம் சத்தியாக்கிரகமும் குருகுலப்போராட்டமும் அந்த வீதிகளில் நடப்பதினாலும், ஒரு குழந்தை உண்பதைப் பார்ப்பதினாலும் தமிழர்களுக்கு மோட்சம் கிடைத்துவிடும் என்ற எண்ணத்தைக் கொண்டதல்ல. வீதிகளில் நடக்கக் கூடாதென்று சொல்லும் பொழுதும், கண்ணால் பார்க்கக் கூடாது என்று சொல்கிறபொழுதும் சொல்கிறவர்கள் மனதில் என்ன நினைத்துக்கொண்டு சொல்லுகின்றனர் என்பதைப் பற்றித்தான் யோசிக்க வேண்டும். பெரியார் (1925) இதுகாலை இருந்து வருகிற பிராமணரல்லாதார் இயக்கமானது முறுகி எழுவதற்குக் காலம் சமீபித்துவிட்டது என்பதற்கு குருகுல சம்பந்தமான நிகழ்ச்சிகள் சான்று கூறுகின்றன. சொ. முருகப்பா (1925)
பழ. அதியமான்:
பழ. அதியமான் (பி. 1961) வ.ரா. ஆய்வாளர். தி.ஜ.ர.; அறியப்படாத ஆளுமை: ஜார்ஜ் ஜோசப்; வ.ரா.; சக்தி வை. கோவிந்தன்; சென்னைக்கு வந்தேன்; கு. அழகிரிசாமி சிறுகதைகள் முழுத் தொகுப்பு; பெரியாரின் நண்பர்: டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு; சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்; பாரதி கவிதைகள் முழுத் தொகுப்பு; பாரதியின் பாஞ்சாலி சபதம்; நவீனத் தமிழ் ஆளுமைகள்; கிடைத்தவரை லாபம் ஆகிய நூல்களின் ஆசிரியர், தொகுப்பாசிரியர், பதிப்பாசிரியர். தமிழ்ச் சிந்தனை வரலாறு தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டிருப்பவர். அகில இந்திய வானொலியில் உதவி இயக்குநராகப் பணியாற்றுகிறார். மனைவி: டாக்டர் அமுதா, மகள் ஆழி அரசி.
Reviews
There are no reviews yet.