Highlights
General
Title |
Ishthanpull இஸ்தான்புல் |
Author |
|
Language |
Tamil |
Edition |
|
Pages |
Publication
Published By |
Kalachuvadu Pathippagam |
₹428
நோபல் பரிசு பெற்ற துருக்கிய எழுத்தாளர் ஓரான் பாமுக்கின் ஞாபகப் புத்தகம் ‘இஸ்தான்புல்’. தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் நகரத்தைப் பற்றி நினைவுகூரும் இந்நூலில் பாமுக் தனது இளமைப் பருவத்தையும் திரும்பிப் பார்க்கிறார். இளம்பருவத்திலேயே ஒரு எழுத்தாளனின் வளர்ச்சி நிலைகள் தனக்குள் துலங்கியதை நினைவுகூர்கிறார். தனது நகரம் மாறியதையும் நகரத்தோடு தானும் மாறியதையும் நுட்பமாகச் சொல்லிச் செல்கிறார். ஓவியனாக விரும்பி எழுத்தாளனாக மாறிய பாமுக் இஸ்தான்புல் நகரத்தைத் தனது எழுத்துமூலம் அசாதாரணமான அருங்காட்சியகமாக மாற்றுகிறார். ஒரு நகரத்தின் கதை என்ற நிலையிலேயே ஓரான் பாமுக்கின் படைப்பாற்றல்மூலம் இஸ்தான்புல் ஒரு பண்பாட்டின் மையமாகவும் மாற்றங்களின் திருப்புமுனையாகவும் மனிதர்களின் கதைக்களமாகவும் வரலாற்றின் சின்னமாகவும் மாறுகிறது. தனது நகரமான இஸ்தான்புல்லைப் பற்றிச் சொல்லும்போது அவர் பெருமிதம் கொள்கிறார். நெகிழ்கிறார். தன்னுடைய கற்பனைத்திறனுக்குச் செழுமையூட்டிய இஸ்தான்புல்லை ஓரான் பாமுக் நினைவுகூரும் விதம் மிக இயல்பானது. அதே சமயம் மிகமிக அசாதாரணமானது.
ஓரான் பாமுக்
ஓரான் பாமுக் (பி. 1952) துருக்கிய நகரமான இஸ்தான்புல்லில் வசதியான குடும்பத்தில் ஓரான் பாமுக் பிறந்தார். பள்ளிப் படிப்புக்குப் பின்னர் ஓவியக் கலை மீதான ஆர்வம் காரணமாக இஸ்தான்புல் தொழில் பல்கலைக்கழகத்தில் கட்டடக் கலை பயின்றார் பட்டம் பெற்றும் அதைத் தொழிலாக ஏற்றுக்கொள்ளவில்லை. எழுத்துத் துறையில் ஏற்பட்ட ஈடுபாட்டால் இஸ்தான்புல் பல்கலைக்கழகத்தில் இதழியல் பயின்றார். இருபத்திரண்டாம் வயதில் நாவல் எழுதுவதில் முனைந்தார். முதல் நாவல் ‘செவ்தெத் பேயும் பிள்ளைகளும்’ . 1982இல் வெளியானது. தொடர்
Reviews
There are no reviews yet.