Highlights
General
Title |
Izhappin Varaipadam இழப்பின் வரைபடம் |
Author |
|
Language |
Tamil |
Edition |
|
Pages |
Publication
Published By |
Kalachuvadu Pathippagam |
₹225
வரைபடம் உருவாக்கும் பணியில் ஈடுபட்டவளான ஒருத்தி. தனது உடமைகள் என்ற உணர்வும், அவற்றின் ஒழுங்கு குலையக்கூடாது என்ற பிடிவாதமும் கொண்டவள். அவளுடைய தனிமையில் குறுக்கீடாக வந்து சேர்கிற, அவளது இரட்டைச் சகோதரி என இரண்டே மையக் கதாபாத்திரங்களைக் கொண்ட நூல். அவர்களுக்குப் பெயர்கள் இல்லை. அவர்களுடைய பூர்விக நாட்டுக்கோ, போர் காரணமாக இடம்பெயர்ந்து தஞ்சம் புகுந்திருக்கும் நாட்டுக்கோகூடப் பெயர்கள் குறிப்பிடப்படுவதில்லை. போரின் விளைவாக எல்லைகள் அழிவதும், தனிநபர்களின் அல்லாட்டமும், குறிப்பிட்ட ஒரு புள்ளியை மட்டுமே திரும்பத் திரும்பச் சுற்றிவரும் பீடிப்பு கொண்ட மனமும், நூல் முழுவதும் கேட்கும் ஒற்றைக் குரலும் என வாசகமனத்தின் சம நிலையைக் குலைக்கக்கூடிய படைப்பு. கதைசொல்லியும் அவளுடைய சகோதரியும் நிம்மதியாகத் தன் வாழ்வைக் கழித்துக் கொண்டிருக்கும் குடிமகளும், அவளுடைய வாழ்வில் குறுக்கிடும் போரும் என விரிவடையும் குறியீட்டு வாசிப்பையும் தரக்கூடிய நூல். போர்க் காலத்தின் மீது நேரடியான உரத்த விமர்சனத்தை எழுப்பாமல், வாசக மனத்தில் தானாகவே அது எழும் விதமாக அடங்கிய குரலில் பேசும், கலை அனுபவத்தைத் தருவது. புகைமூட்டம் போன்ற காட்சி விவரிப்பின் மூலமாக, பெரும் சுமையாக மாறிவிட்ட அன்றாடத்தைக் கனவுப் புலமாக ஆக்கித் தப்பிக்க முயலும் தனிமனம் அதில் வெற்றியடைய முடிகிறதா என்பதே இந்த நாவலின் ஆதாரக் கேள்வி.
லாரா ஃபெர்கஸ்
லாரா ஃபெர்கஸ் ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் வளர்ந்த லாரா ஃபெர்கஸ் நடனக் கலை மீதிருந்த ஆர்வத்தின் காரணமாக அறிவியல் பட்டப்படிப்பைத் துறந்தவர். சில காலம் நடனக் கலைஞராக இருந்த இவர், கணுக்காலில் ஏற்பட்ட பிரச்சினையினால் ஆட இயலாது போனபின் நடனத்தைத் துறந்தார். பாத்திரங்கள் கழுவுவது, உலகில் வேறு இடங்களுக்குச் செல்வது ஆகியவை இவரது முக்கியப் பணிகளாயின. ஏழு ஆண்டுகள் வேறு நாடுகளில் வசித்தார். அதிக காலம் பாரிஸ் நகரத்தில். எழுத்து, பெண்கள் வாழ்வைப் பற்றிய மேற்படிப்பு, சர்வதேச சட்டங்கள் ஆகிய துறைகளில பட்டங்களைப் பெற்ற இவர், பின் புலம்பெயரும் பெண்கள், அகதிகளாகும் பெண்கள் ஆகியோருக்கெனச் செயல்படும் அமைப்புகள் மற்றும் வேறு பல அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றினார். மனித உரிமைகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். இவரது பணிகளில் பெண்கள் மீதான வன்முறைகள் சிறப்புக் கவனம் பெறுகின்றன. தற்போது இவர் மெல்பர்ன் நகரில் தன்னுடைய துணைவி மரீஸுடன் வசித்துவருகிறார். ‘My Sister Chaos’ இவரது முதல் நாவல்.
Reviews
There are no reviews yet.