Posted on September 17, 2021
உடலளவில் இணைதலே டேட்டிங் என்ற தவறான புரிதலை இன்றும் சமூகத்தில் பலர் கொண்டிருக்கிறார்கள். மனதளவில் புரிந்து கொண்டு வாழ்க்கையை இன்பமாக தொடங்குவதே டேட்டிங் கலாசாரம் .
இயற்கை சூழல் நிறைந்த யாருமில்லாத தனிமை உங்கள் அன்பை முழுமையாக வெளிப்படுத்தும். வியர்வை வடிய படுக்கையறைக்குள் நுழைவது தாம்பத்தியத்தில் ஈர்ப்பை உண்டாக்காது. அடுப்பரை சமாச்சாரம் முதல் கட்டில் சமாச்சாரம் வரை பிடித்ததை பகிருங்கள்.
டேட்டிங் என்றதும் மதுஅருந்துவதும், முத்தமழைபரிமாற்றங்களும், ரொமான்டிக் விளையாட்டுகளும் என்று நினைக்கும் பெருசுகள் முதலில் அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். டேட்டிங் என்பது காதலர்களுக்கு மட்டுமானதல்ல. திருமணம் முடிந்த புதுமணத்தம்பதிகளுக்கும் பொருந்தும் என்கிறார்கள் உளவியலாளர்கள்.
காதலிக்கும் போதும் திருமணத்துக்குப் பின்பும் துணையைப் புரிந்து கொள்ள ஒரு தனிமை தேவைப்படுகிறது. இதைத்தான் டேட்டிங் என்று அழைக்கிறார்கள். இந்தப் புரிதல் அனைவருக்கும் தேவையானது.
ஒருவருக்கொருவர் அறிமுகமான புதிதில் துணையைப் புரிந்து கொள்வதில் நிச்சயம் சிரமம் இருக்கும். புதி தாக திருமணம் முடித்த தம்பதியர் தான் அதிகம் திணறிப்போவார்கள்.
தற்போதைய சூழலில் காலமாற்றத் தில் பேசி பழகி திருமணம் முடித்தாலும் இயல்பான கூச்சம் திருமணத்துக் குப் பிறகு இருவருக்கும் இருக்கவே செய்யும். குறிப்பாக மற்றவர்கள் முன்னிலையில் பேசுவதற்கு கூட தயங்கி தவிக்கும் இளம் ஜோடிகள் இன்றும் உண்டு.
விஷயங்கள்வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்பு முதலில் உங்களவரைப் பற்றி முழுமையாக புரிந்துக்கொள்ளுங்கள். இன்று பெருகிவரும் விவாகரத்துகளுக்கு முக்கிய காரணம் ஒருவருக்கொருவர் பற்றிய புரிதல் இல்லாமையே. எளிமையான முறையில் சில விஷயங்களைத் தொடர்ந்து கடைப்பிடித்தால் இது உங்கள் இல்லற வாழ்க் கையை மேலும் இனிமையாக்கும்.
உங்களவருடன் எப்படி பயனுள்ள வகையில் உங்கள் நேரத்தைக் கழிப்பது. உங்களை அவர் முழுமையாக புரிந்துகொள்ள செய்வது. மேலும் உங்கள் அதீத அன்பை அவரிடம் எப்படியெல்லாம் தெரிவிப்பது என்று யோசிக்கிறீர்களா?
உங்களுக்கான குறிப்பை கொடுத்திருக்கிறோம். படித்து அதன்படியே செய்தும் பாருங்கள். இருவருமே எப் போதும் ஜாலி மூடிலேயே வலம் வருவீர்கள்.